September 28, 2020
Home » “2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் கொரோனா பாதிப்பு” – உலக சுகாதார மையம்
உலகம்

“2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் கொரோனா பாதிப்பு” – உலக சுகாதார மையம்

WHO dailystand.in

கொரோனா பாதிப்பு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என நம்புவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், பொருளாதாரமும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என மக்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. இந்த நோய்க்கான தடுப்பூசி எதுவும் பயன்பாட்டுக்கு வராததால், சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என நம்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். 1918ம் ஆண்டு உலகையே புரட்டிப் போட்ட ஸ்பானிஷ் ஃபுளூ பாதிப்பும் முடிவுக்கு வர இரண்டு ஆண்டுகள் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் அதிகம் பரவுகிறது. அது வேகமாக பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் உலகில் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி நாம் கொரோனா பரவலை தடுத்து நிறுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் இந்த கொடிய தொற்றால் 2,31,20,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,03,213 பேர் மாண்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Related posts

Leave a Reply