Home » டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு வருத்தம்…!! இந்தியாவில் செயல்பட அனுமதி கேட்டு வரும் டிக்டாக் நிறுவனம்….!!
உலகம்

டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு வருத்தம்…!! இந்தியாவில் செயல்பட அனுமதி கேட்டு வரும் டிக்டாக் நிறுவனம்….!!

tiktok-dailystand

லடாக் எல்லையில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மத்திய அரசு சீன செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டது. இதனால் டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற பல செயலிகள் கூகிள் ப்ளேஸ்டோர் மற்றும்  ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்தியாவின் தகவல்கள் இதுபோன்ற சீன செயலிகளால் சீன அரசை சென்றடைவதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிக்டாக்  இந்தியாவின் ட்விட்டர் பக்கம் டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளின் பயன்பாட்டை இந்திய அரசு தடை செய்தது வருத்தம் அளிக்கிறது. எனினும் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக உள்ளோம். டிக்டாக் பயனாளர்களின் தகவல்கள் எதையும் எக்காரணத்திலும் சீனா உள்ளிட்ட எந்த நாட்டிற்கு அளிக்க மாட்டோம் என்பதை உறுதி படுத்துகிறோம் என ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

Related posts

Leave a Reply