September 28, 2020
Home » ஆதாரமின்றி ஆதாயத்துக்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக டிரம்ப் மீது ‘டிக்டாக்’ நிறுவனம் புகார்..!
உலகம்

ஆதாரமின்றி ஆதாயத்துக்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக டிரம்ப் மீது ‘டிக்டாக்’ நிறுவனம் புகார்..!

tiktok-trump-dailystand.in

இந்திய மற்றும் சீனா நடுவே நடந்த எல்லை பிரச்னையைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய செய்திகள் சில சீன செயலிகள் மூலம் திருடப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் 59 செயலிகளை தடை செய்தது இந்திய அரசு. மேலும், செயலிகள் மற்றும் அதன் தகவல் பாதுகாக்கப்படுவதற்கான முழு தகவல் அறிக்கை பற்றி தகவல் தெரிவிக்குமாறும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக்காவும் சில சீன செயலிகளைத் தடை செய்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது, டிக் டாக், ஹலோ செயலிகளின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் என்னும் நிறுவனம் தங்களது உரிமைகளை அரசியல் ஆதாயத்துக்காக அமெரிக்க அதிகாரிகள் பறித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், அமெரிக்க பரிவர்த்தனைகளை தடை செய்யும் அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.

எந்த வித ஆதாரமும் இல்லாமல் அசாதரணமான மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதாக தங்கள் நிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் 39 பக்க மனுவில் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Reply