Home » சும்மாவே கேமரா முன் அமர்ந்த இளைஞர்…!! யூடியூபில் குவியும் வியூவ்ஸ்…!!
உலகம்

சும்மாவே கேமரா முன் அமர்ந்த இளைஞர்…!! யூடியூபில் குவியும் வியூவ்ஸ்…!!

indonesia-dailystand

இந்தோனேசியவை சேர்ந்த முகமது திடிட் கேமராவின் முன் அமர்ந்து கேமராவையே வெறித்து பார்த்து சுமார் 2 மணி நேர பொழுதைக்
கழித்துள்ளார். ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த வீடியோவை 1.9 லட்சத்துக்கும் அதிகமான
மக்கள் பார்த்துள்ளனர். அதேசமயம் எப்படி இவர் இத்தனை மணி நேரம் ஒன்னும் செய்யாமல் இருகிறார், அவரது மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும் என்றெல்லாம் பல கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தோனேசிய இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையிலான வீடியோவை வெளியிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டனர். அதனால்தான் நான் கனத்த இதயத்துடன் இந்த வீடியோ எடுத்துள்ளேன். இதில் என்ன நன்மை என்று கேட்டால் அது பார்வையாளர்களான உங்களை பொறுத்தது என முகமது திடிட் இந்த வீடியோவை குறித்து கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply