September 28, 2020
Home » கைலாசா நாட்டின் புதிய நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா
உலகம்

கைலாசா நாட்டின் புதிய நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா

nithiyandha-dailystand

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயங்கள் என்று கூறி சில தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளார் சாமியார் நித்தியானந்தா.

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக
இருப்பவர் நித்யானந்தா. தான் உருவாக்கியுள்ள கைலாசா என்ற நாட்டில் தற்போது புதிய நாணயங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

கைலாசாவுக்கென ரிசர்வ் வங்கி, கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியான இன்று அதை அறிமுகம் செய்துள்ளார்.கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டுள்ள அவர், இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் கைலாசாவுக்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Reply