Home » சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதுவித ஜி 4 காய்ச்சல்..! எந்நேரமும் மனிதர்களை தாக்கலாம் என எச்சரிக்கை ..!
உலகம்

சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதுவித ஜி 4 காய்ச்சல்..! எந்நேரமும் மனிதர்களை தாக்கலாம் என எச்சரிக்கை ..!

pig-dailystand

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரொனா தாக்கம் உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. கொரோனா சீற்றமே இன்னும் குறையாத நிலையில் சீனாவில் அடுத்ததாக ஒரு பிரச்சனை தொடங்கி உள்ளது.

கொரோனா எனும் பெருந்தொற்றையே இன்னும் சமாளிக்க முடியாத நிலையில் அடுத்ததாக மேலும் ஒரு பெருந்தொற்று சீனாவில் இருந்து பரவ கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

pig-dailystand

அமெரிக்க இதழ் ஒன்றில் சீன ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரையில் ஜி 4 என பெயரிடப்பட்டுள்ள அந்த கிருமி முன்னதாக நோய் தொற்றை பரப்பிய h1n1 வகையை சார்ந்தது என கூறப்படுகிறது. 2011 முதல் 2018 வரை பன்றிகளின் மூக்கில் இருந்து எடுக்கபட்ட மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் 179 வகையான பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் எந்த நேரமும் மனிதர்களை தாக்கலாம் என்றும் கொரோனா போலவே பெருந்தொற்றாக மாறலாம் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்போது வரை ஆபத்து இல்லை ஆனால் இதனை எதிர்க்கும் அளவுக்கு மனித உடலில் நோயெதிர்ப்பு சக்தி இல்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply