Home » இப்படியெல்லாம் கூடவா பண்ணுவிங்க…?! கொரோனா அச்சத்தில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவிய நபர்…!!
உலகம்

இப்படியெல்லாம் கூடவா பண்ணுவிங்க…?! கொரோனா அச்சத்தில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவிய நபர்…!!

money-dailystand

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தென்கொரியாவில் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் கொரோனா அச்சத்தால் அவரிடம் இருந்த 50,000 வோன் நோட்டுக்கட்டை வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்துள்ளார். அதாவது 50 ஆயிரம் வோன் மதிப்பு 42 லட்ச டாலருக்கு சமம் ஆகும்.

அத்தோடு விடாமல் அதனை ஹீட்டரில் போட்டு அதில் இருக்கும் கிருமிகளை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஹீட்டரில் வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் சில வோன் நோட்டுகள் பலத்த சேதம் அடைந்தன. இதை பார்த்து ஷாக் ஆன அவர் ஹீட்டரில் இருந்து பணத்தை வெளியே எடுத்துள்ளார். இதில் நோட்டுகள் பலத்த சேதமடைந்தது.

இதனை அடுத்து வங்கியை அணுகி நடந்ததை கூறியுள்ளார். இதனை அடுத்து மோசமாக கிழிந்து எரிந்த நிலையில் இருந்த வோன் நோட்டுகளை மட்டும் வங்கியில் மாற்றிக் கொடுத்துள்ளனர்.

Related posts

Leave a Reply