September 22, 2020
Home » காரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…
உலகம்

காரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…

onionload_dailystand.in

காரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி.

சீன நாட்டின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்த காதலர்களின் காதலன் தன்னுடைய காதலியுடனான காதலை முறித்துக் கொண்டார். இது அந்த காதலிக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பழி வாங்க முடிவு செய்த காதலி, தனது காதலனுக்கு ஒரு லாரி முழுவதும் வெங்காயத்தை அனுப்பி அவரின் வீட்டுமுன் கொட்ட சொல்லி, அத்தியாவசிய பொருட்கள் வீட்டுக்கு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

காதல் முறிவிற்கு பிறகு அவன் சற்றும் கவலைப்படவோ, அழுகவோ இல்லை, அதற்காகவே இப்படி செய்தேன் என்றார் அந்த பெண். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Reply