Home » கொரோனா நோயாளிகளை கண்டறியும் மோப்ப நாய்கள்….!! கொரோனாவை ஓடஓட விரட்ட சிலி நாட்டில் புதிய திட்டம்…!!
உலகம்

கொரோனா நோயாளிகளை கண்டறியும் மோப்ப நாய்கள்….!! கொரோனாவை ஓடஓட விரட்ட சிலி நாட்டில் புதிய திட்டம்…!!

dog-dailystand

உலகம் முழுவது தீவிரமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்து நோயை கண்டுப்பிடிக்கப்படுகிறது ஆனால் சிலருக்கு எந்தவிடமான
அறிகுறிகளும் தென்ப்படவில்லை. இதனால் நோய்யால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுப்பிடுக்க சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.

இந்நிலையில் சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர். போதைப்பொருட்கள், வெடிபொருட்கள் அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் 4 மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதாக சிலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு வாசனை இல்லை. இருந்தாலும் அது உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தால் மக்களின் வியர்வையில் வித்தியாசமாக வாசனை ஏற்படுகிறது என்றும் ஆகஸ்டுக்குள் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால் ரெயில் நிலையங்கள் மற்றும்
விமான நிலையங்களில் ரோந்து செல்ல முடியும் என என இந்த திட்டத்தின் கால்நடை தொற்றுநோயியல் பேராசிரியர் பெர்னாண்டோ மார்டோன்ஸ் தெரிவித்தார்.

Related posts

Leave a Reply