September 28, 2020
Home » பெய்ஜிங்கில் மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டாம் -அரசு
உலகம்

பெய்ஜிங்கில் மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டாம் -அரசு

china-dailystand

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, மக்களுக்கு முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது பெய்ஜிங் அரசு.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய சீனா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சமூக இடைவெளியை மறந்து மக்கள் கொண்டாட்டமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோன பாதிப்பு குறைந்ததையடுத்து, முகக்கவசம் அணிவதிலிருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தளர்வு அளிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்தே வெளியே வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் மற்றவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்சமும் மக்கள் மனதில் இருக்கிறது.

யெய்ஜிங்கில் கடந்த 13 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகாத நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஒருமுறை ’முகக்கவசம் அணிய தேவையில்லை’ என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்ட பிறகு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்பு தற்போதும் முகக்கவசம் அணியத்தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.

Related posts

Leave a Reply