Home » உலக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்…!! மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது…!!
உலகம்

உலக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்…!! மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது…!!

twitter-dailystand

பல்வேறு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் அண்மையில் ஹேக் செய்யப்பட்டு அவர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டு அதன் மூலம் அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

இந்த ட்வீட் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் ஆகியோரின் ட்விட்டர்கள் உட்பல உலகமெங்கும் பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில்
சுற்றி வந்தன.

twitter-dailystand

இதன் பிறகு பிட்காயின் வாலட்டில் சுமார் 300 பரிவர்த்தனைகள் வழியாக, $100,000 தொகை ஹேக்கர்களால் அவர்களின் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. இதனை அடுத்து இந்த ஹேக்கிங் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 19 மற்றும் 22 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஹேக்கின் மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் என போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சிறுவனின் மீது 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply