Home » விருத்தாசலம் அருகே வரதட்சணை கொடுமையால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை… கணவர், மாமனார், மாமியார் மூவர் கைது
தமிழ்நாடு

விருத்தாசலம் அருகே வரதட்சணை கொடுமையால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை… கணவர், மாமனார், மாமியார் மூவர் கைது

marriage_suicide_dailystandin

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனுார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(24) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஷோபனா (21) என்பவருக்கும் கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆகி ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் தான் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோ பதிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், 15.7.2020 அன்று ஷோபனாவின் அண்ணன், தனது தங்கை ஷோபனாவை முறைப்படி திருமணம் செய்து கொடுத்து இரண்டு வருடம் ஆகிறது எனவும், ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ஷோபனாவிடம் வரதட்சணை கேட்டு அவரின் கணவர் அடித்து தூக்கு மாட்டி விட்டதாகவும் அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் விருந்தாசலம் காவல் நிலையத்தில் 1583/20 பிரிவு 174 (ii) CRPC யின் வழக்குப்பதிவு செய்து, விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு இளங்கோவன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு பிரிவு 306, 304 (b) IPC யின்படி சட்டபிரிவு மாற்றம் செய்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்டோர் விஜயகுமார், அன்பழகன், செல்வராணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

Leave a Reply