September 22, 2020
Home » கொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..!
தமிழ்நாடு

கொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..!

dailystand.in

கொரோனா தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது. அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து நோய் தொற்றினை குறைக்க போராடி வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாநகரம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. இதுவரை திருச்சி மாநகரப் பகுதியில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஏற்கனவே 23 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து திருச்சி மாநகரப் பகுதியில் கொரோனா பாதிப்பு இல்லாமல் மாறியுள்ளது.

மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை சேர்ந்த 6 பேர் மற்றும் பெரம்பலூர்(5) , அரியலூர்(2), புதுக்கோட்டை(1) மாவட்டத்தை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

Leave a Reply