September 22, 2020
Home » தமிழகத்தில் என்னென்ன கட்டுபாடுகளுடன் மதுக்கடைகள் இயங்க வேண்டும்?
தமிழ்நாடு

தமிழகத்தில் என்னென்ன கட்டுபாடுகளுடன் மதுக்கடைகள் இயங்க வேண்டும்?

tasmac_dailystand.in

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதை காண முடிந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று திடீரென்று மதுபான கடைகளை மே 7 அன்று திறக்க அனுமதி அளித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகளும் அறிவித்துள்ளது.

1.ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் 6 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்
2.தேவைக்கேற்ப மதுபான கடைகளில் கூடுதல் நபர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளலாம்.
3.மதுபானகடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்க பட வேண்டும்
4.ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடைகளில் கூட்டம் கூட கூடாது.
5.தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
6.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கபட வேண்டும்

இதுபோன்ற நிபந்தனைகளுடன் தான் மதுபான கடைகள் இயங்க வேண்டும். மேலும் பார்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

Related posts

Leave a Reply