September 28, 2020
Home » கோவை சூலூர் அருகே நீட் தேர்வு மையத்திற்கு தமிழ் வினாத்தாள் வராததால் 2 மணி நேரம் தாமதமாக நடைபெற்ற தேர்வு..!
தமிழ்நாடு

கோவை சூலூர் அருகே நீட் தேர்வு மையத்திற்கு தமிழ் வினாத்தாள் வராததால் 2 மணி நேரம் தாமதமாக நடைபெற்ற தேர்வு..!

sulur-neet-center-dailystand.in

கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் 10 ஆயிரத்து 627 நீட் தேர்வு எழுதினர். சூலூர் பகுதியில் 4 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு விஜய வித்யாலயா பள்ளியில் 660 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். 2 மணியளவில் தேர்வுகள் துவங்கியது.

இந்நிலையில் தேர்வு எழுத தமிழ் மொழியைத் தேர்வு செய்த தேர்வர்களுக்கு தமிழ் வினாத்தாள் வரவில்லை. இதனால் குழப்பமடைந்த தேர்வர்கள் அதிகாரிகளிடம் தேர்வு எழுத முடியவில்லை எனவும், தமிழ் வினாத்தாள் வழங்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் தமிழ் வினாத்தாள் வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரம் தாமதமாக நான்கு மணிக்கு தேர்வுகள் துவங்கியது. மாலை 4 மணி முதல் 7 மணிவரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்கள் 5 மணிக்கு தேர்வு எழுதி வெளியே வந்த நிலையில் 70 மாணவர்கள் மட்டும் வராததால் காத்திருந்த பெற்றோர்கள் குழப்பமடைந்தனர். தாமதமாக வினாத்தாள்கள் வழங்கியதால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளனதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Reply