Home » கோலாகலமாக நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சேலத்திலிருந்து வெள்ளி செங்கல் அனுப்பி வைப்பு…!!
தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சேலத்திலிருந்து வெள்ளி செங்கல் அனுப்பி வைப்பு…!!

rama-dailystand

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக சேலம் மரவனேரியில் வெள்ளி செங்கலுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாக அமையபோகும் ஸ்ரீராமர் கோயிலுக்கு பூமி பூஜை வரும் 5 ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

rama-dailystand

பூஜிக்கப்பட்ட இந்த வெள்ளி செங்கல் வரும் 2 ம் தேதி அயோத்தியை சென்றடைந்து 3 ம் தேதி கோவில் நிர்வாக கமிட்டியிடம் ஒப்படைக்க உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Reply