Home » கோவையில் விஷவாயு தாக்குதல் இன்றி கழிவு நீரை அகற்ற அதிநவீன வசதிகளுடன் 5 ரோபோட்டிக் இயந்திரங்கள் அறிமுகம்
தமிழ்நாடு

கோவையில் விஷவாயு தாக்குதல் இன்றி கழிவு நீரை அகற்ற அதிநவீன வசதிகளுடன் 5 ரோபோட்டிக் இயந்திரங்கள் அறிமுகம்

drainage_cleaning_robot_dailystand.in

கோவை மாநகரில் 5 மண்டலங்கள் உள்ளன. மொத்தம் 100 வார்டுகள் இருக்கும் நிலையில் கழிவு நீரை அகற்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தினதோறும் வெளியாகும் கழிவு நீரை நவீன ரோபோட்டிக் இயந்திரங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சோதனை முயற்சியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ரோபோட்டிக் இந்திரம் வாங்கபட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 5 இயந்திரங்கள் வாங்கபட்டுள்ளது. 2.12 கோடி மதிப்பில் வாங்கபட்டுள்ள இந்த இயந்திரங்கள், மாநகராட்சி பகுதியில் மண்டலத்திற்கு தலா ஒரு இயந்திரம் என 5 மண்டலங்களில் பயன்படுத்தபட உள்ளது.

இயந்திரங்களை வாங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் 20 லட்சமும் ரூபாயும் மீதி தொகையை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிர்வாகமும் வழங்கி உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக வாங்கப்பட்ட 5 கழிவுநீர் அகற்றும் தானியங்கி ரோபோட்டிக் இயந்திரங்களின் செயல்பாட்டை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் கோவை கேர் ( Kovai care) செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

இதில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Reply