Home » சென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்…!! பொதுமக்கள் அவதி…!!
தமிழ்நாடு

சென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்…!! பொதுமக்கள் அவதி…!!

chennai-dailystand

சென்னையில் ஆவடி, பூந்தமல்லி, போரூர், மதுரவாயில், அம்பத்தூர், பாடி தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும் அண்ணா நகர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் அம்பத்தூர் எம்.டி.எச் சாலை, மண்ணூர்பேட்டையில் சாலை ஓரத்தில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் அந்த பகுதியில்
செல்வோர் கடுமையான அவதிக்குள்ளாகினர். அந்த பகுதியில் இருக்கம் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டி இருப்பதால் மழைநீர் செல்வதற்கான போதிய வடிகால் வசதிகள் இல்லை. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது.

மேலும் இது தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்து வரும் பிரச்சனை என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Related posts

Leave a Reply