Home » கோவையில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழ்நாடு

கோவையில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

corona_in_cbe_dailystand.in

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 1500ஐ கடந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1644 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 11வயது சிறுமி உட்பட 25 பெண்கள் மற்றும் 27 ஆண்கள் என 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 19 பேரும் மற்ற 33 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் போத்தனூர் பகுதியில் 4 பேரும், சவுரிபாளையம் 4, காட்டூர் பகுதியில் 2, பி.என்.புதூர் 2, சிங்காநல்லூர் 2, பீளமேடு 2, செல்வபுரம் 4 பேரும், துடியலூர், மதுக்கரை, தாமஸ் வீதி, சித்தாபுதூர், தெலுங்கு வீதி, நீலம்பூர், சங்கனூர், சுந்தராபுரம், ராக்கிபாளையம், கருப்ப கவுண்டர் வீதி, செட்டிபாளையம், கவுண்டம்பாளையம், பட்டணம், கிரீன்வே டெலிகாம் காலனி, தெலுங்கு பாளையம், சாய்பாபா கோவில், பெரியார் நகர், சுள்ளிவால் வீதி, திருமலையாம் பாளையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு என மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Reply