September 28, 2020
Home » பொள்ளாச்சியில் சமூக இடைவெளி இல்லாமல் மாட்டுச்சந்தை கூடியதால் கொரொனா பரவல் அச்சத்தில் ஊர் பொதுமக்கள்..!
தமிழ்நாடு

பொள்ளாச்சியில் சமூக இடைவெளி இல்லாமல் மாட்டுச்சந்தை கூடியதால் கொரொனா பரவல் அச்சத்தில் ஊர் பொதுமக்கள்..!

pollachi-cow-market-dailystand.in

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி மாட்டுச்சந்தை வாரம் இருமுறை நடைபெற்று வருகிறது. தமிழகத்திலுள்ள காங்கயம், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஆந்திரா கர்நாடகா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து மாடுகள் வாங்க திப்பம்பட்டி சந்தைக்கு வியாபாரிகள் வந்து செல்வார்கள். இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களாக கரேனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாட்டுச் சந்தை மூடப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தது மேலும் திப்பம்பட்டி சில தினங்களுக்கு முன்பு பெண்கள் இருவர் ஆண் என மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. கொரொனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் உள்ள நிலையில் திப்பம்பட்டி ஊருக்குள் உள்ள தனியார் தோட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மாட்டுச்சந்தை கூடியதால் ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஊர் பொதுமக்கள் கூறுகையில் திப்பம்பட்டியில் தற்பொழுது வியாபாரிகள் E-pass இல்லாமல் வரும் வெளிமாநில மாட்டு சந்தையில் கூடுவதால் கொரொனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதர, மருத்துவ துறை, அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

Related posts

Leave a Reply