Home » மக்களிடம் நல்லுறவை கடைப்பிடிக்காத 80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு –திருச்சி டிஐஜி நடவடிக்கை..!
தமிழ்நாடு

மக்களிடம் நல்லுறவை கடைப்பிடிக்காத 80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு –திருச்சி டிஐஜி நடவடிக்கை..!

police-dailystand

திருச்சி சரகத்திற்குள் வரும் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் , அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்ட காவல் நிலையங்களில் மக்களிடம் நேரடி தொடர்பில் பணியாற்றி வரும் 80 காவலர்கள் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கபட்டுள்ளனர்.

விடுவிக்கபட்ட காவலர்களுக்கு ஒரு மாத கால சிறப்பு உளவியல் பயிற்சி அளிக்கபட உள்ளதாகவும் மக்களிடம் எப்படி நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அவர்கள் முரட்டு தனமாக நடந்து சூழல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு உளவியல் ஆலோசனை அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

police-dailystand

மக்களிடம் நல்லுறவை கடைப்பிடிகாமல் பணியின் போது மக்களிடம் மூர்க்கதனமாக நடந்து கொண்டு குற்றச்சாட்டிற்கு உள்ளான காவலர்கள் 180 பேர் 5 மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 80 பேர் மட்டும் உளவியல் சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Leave a Reply