Home » மாஜிஸ்டிரேட்டை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட்..!
தமிழ்நாடு

மாஜிஸ்டிரேட்டை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட்..!

police-dailystand

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் போலீசார் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில் , நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து புகார் ஒன்று வந்துள்ளது.

அதில் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்ட போது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் வீடியோ எடுத்ததாகவும், விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் மகாராஜன் என்ற காவலர் ஒருவர் ஒருமையில் உன்னால் ஒன்றும் செய்ய முடியாதுடா என்ற தகாத வார்த்தைகளால் நீதித்துறை நஹ்டுவரை அவமதித்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்படுள்ளது. நீதித்துறை நடுவரை அவமதித்தது தொடர்பாக காவல்ர் மகாராஜனை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Reply