September 25, 2020
Home » மன்னார்குடி அருகே கடன் கேட்டு தரமறுத்த தம்பியை கொலை செய்த அண்ணன்..!
தமிழ்நாடு

மன்னார்குடி அருகே கடன் கேட்டு தரமறுத்த தம்பியை கொலை செய்த அண்ணன்..!

மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ், சுசிலா தம்பதியினர். அவர்களுக்கு சிவக்குமார் வயது 36 மற்றும் முருகவேல் வயது 26 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவகுமார் திருமணம் ஆகியும் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். மேலும் அடிக்கடி வீண் தகராறில் ஈடுப்பட்டு வந்ததால் காவல் நிலையத்தில் அவர் மீது புகார்கள் உள்ளது.

முருகவேலுக்கு திருமணம் ஆகவில்லை அவர் கட்டுமான கூலி வேலைக்கு செல்கிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிவக்குமார் செலவுக்காக ரூ.3 ஆயிரம் கடனாக முருகவேலிடம் கேட்டுள்ளார். ஆனால் முருவகேல் கடன் தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகவேலை குத்தியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த முருகவேல் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து செல்லபட்டுள்ளார். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து காவல்நிலையத்தில் சுசிலா அளித்த புகாரின் பேரில் போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Reply