Home » “போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது”- மதுரை உயர்நீதிமன்ற கிளை..!
தமிழ்நாடு

“போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது”- மதுரை உயர்நீதிமன்ற கிளை..!

court-dailystand

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் இருவர் போலீசார் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்த நிலையில் நேற்று வெளியான சில சிசிடிவி காட்சிகள் அவற்றை போலியாக்கி உள்ளன.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதித்துறை நடுவரை விசாரணையின் போது தகாத முறையில் பேசியதற்காக தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன்  நேரில் ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் உடலில் காயங்கள் அதிக அளவில் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Reply