September 25, 2020
Home » கொரோனா ஒழிய வேண்டும் என வேண்டி கோவிலில் மண் சோறு சாப்பிட்ட பெண் பக்தர்கள்…!!
தமிழ்நாடு

கொரோனா ஒழிய வேண்டும் என வேண்டி கோவிலில் மண் சோறு சாப்பிட்ட பெண் பக்தர்கள்…!!

tn-dailystand

எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் பிரசித்தி பெற்ற புதுப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், அமாவாசசை மற்றும் பவுர்ணமி தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறன்றனர்.

இந்நிலையில் நேற்று பவுர்ணமி என்பதால் நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில், மாரியம்மன் வழிபாட்டு மன்ற பெண்பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அம்மனை போற்றி பாடல்கள் பாடி வழிபாடு செய்து, தற்போது உலக மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று நீங்கி, பருவ காலத்தில் நாடு முழுவதும் நல மழைபெய்து, விவசாயம் செழித்திட வேண்டும் என வேண்டி பெண் பக்தர்கள் ஆலய வளாகத்தில் மண் சோறு சாப்பிட்டனர்.

மேலும் அம்மனுக்கு பால், பழச்சாறு, இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில், பட்டாடை உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு ஆனந்தமாய் காட்சி அளித்தார்.

Related posts

Leave a Reply