September 28, 2020
Home » கோவை காந்திபுரம் பகுதியில் சினிமா காட்சி போல கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நடைபெற்ற தாக்குதல்.! பதைபதைக்கவைக்கும் வீடியோ..!
தமிழ்நாடு

கோவை காந்திபுரம் பகுதியில் சினிமா காட்சி போல கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நடைபெற்ற தாக்குதல்.! பதைபதைக்கவைக்கும் வீடியோ..!

cctv-cbe-dailystand.in

கோவை ராம் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிஜு(36) காந்திபுரம் பகுதியில் சோடா கடை நடத்தி வந்தார். அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஆறுமுகம் என்பவருக்கும், பிஜூவிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிஜூ நேற்று ஆறுமுகத்தை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஆறுமுகம் காட்டூர் காவல் நிலையத்தில் பிஜூ மீது புகார் கொடுத்தும், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று மதியம் 12:30 மணியளவில் செந்தில்குமரன் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்ந்தனர். தொடர்ந்து வந்த அந்த கும்பல் பிஜூ மீது கத்தி அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடினர். இதையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிஜுவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து காந்திபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், இதில் பிஜு நேற்று ஆறுமுகம் என்பவரை கத்தியால் குத்தியதால் ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் பிஜூ மீது தாக்குதல் நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் 7 பேர் இன்று பிஜூவை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிஜூ கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் ஆழமாக வெட்டு விழுந்துள்ளதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாய்கள் பாதிப்படைந்ததால் சிகிச்சை பலனின்றி பீஜூ உயிரிழந்தார். இதுதொடர்பாக காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கும்பல் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related posts

Leave a Reply