September 28, 2020
Home » கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதார துறை இணை இயக்குநருக்கு கொரோனா உறுதி..!
தமிழ்நாடு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதார துறை இணை இயக்குநருக்கு கொரோனா உறுதி..!

corona

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 22 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அருளரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது இன்று தெராயவந்தது.

இதையடுத்து அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இதேபோல கோவை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ரமேஷ்குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கோவையில் உயர் பதவியில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Reply