Home » கோவையில் முழு ஊரடங்கு தேவையா? அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதில்..!
தமிழ்நாடு

கோவையில் முழு ஊரடங்கு தேவையா? அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதில்..!

coimatore-dailystand.in

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்புகள் கூடிக்கொண்டே உள்ளது. கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிகமாக இருந்த கோவையில் கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த சில காலமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி . அதன்பி கூறுகையில் கோவையில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவகுழுவினர் மூலம் ஆய்வு செய்த பின் முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கபடும் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முட்வுகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply