Home » கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – முதலமைச்சர் உத்தரவு..!! எப்படி விண்ணப்பிப்பது…??
தமிழ்நாடு

கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – முதலமைச்சர் உத்தரவு..!! எப்படி விண்ணப்பிப்பது…??

college-dailystand

முன்னதாக மாணவர் கல்லூரியில் சேர அவர்கள் விரும்பும் கல்லூரிக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து சமர்ப்பிப்பார்கள். இதற்கு பல முறை கல்லூரிக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா என்னும் கொடூர நோய் பரவி வரும் காரணத்தினால் அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்டமுறை மாணவர்கள் வருவது ஆபத்து நிறைந்ததாகும்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கலை , அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் ஜூலை 20ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

college-dailystand

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த சந்தேகங்ககளுக்கு 044-22351014 மற்றும் 044-22351015 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Reply