Home » சென்னையை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து..! சென்னை ஐ.ஐ.டி எச்சரிக்கை..!
தமிழ்நாடு

சென்னையை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து..! சென்னை ஐ.ஐ.டி எச்சரிக்கை..!

flood-dailystand

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளில் அதிக அளவில் சிக்கி தவிக்கும் நகரமாக சென்னை மாறி உள்ளது . பிற மாவட்டங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் பாதிப்புகள் கூடிக் கொண்டே தான் உள்ளன.

கொரோனா தாக்கமே சென்னையில் எப்போது ஒயும் என்று தெரியாத நிலையில் சென்னை ஐ.ஐ.டி புதிதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னையில் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும் என்றும் காற்றில் ஈரப்படதம் அதிகரித்து வருவதால் 2015ம் ஆண்டை விட 10 மடங்கு மழைக்கு சென்னையில் வாய்ப்புள்ளதாக சென்னை ஐ.ஐ.டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பசுமை இல்ல வாயுக்களை தொடர்ந்து அதிகளவில் வெளியேற்றி வருவதால் , புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை அதிகரித்து வருவதாக அதனால் 10 மடங்கு அதிக அளவில் மழை பொழியும் என்றும் அப்படி பெரு வெள்ளத்தை சென்னை மீண்டும் சந்தித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Reply