Home » ‘தாய் நாட்டுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்புக்கு எனது சிறிய அன்பளிப்பு’ – பேக்கரி உரிமையாளர் ராணுவ வீரர்களுக்கு செய்யும் சேவை…!!
தமிழ்நாடு

‘தாய் நாட்டுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்புக்கு எனது சிறிய அன்பளிப்பு’ – பேக்கரி உரிமையாளர் ராணுவ வீரர்களுக்கு செய்யும் சேவை…!!

military-dailystand

நம் நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவத்தினர் பனி, மழை, வெயில் என எதுவும் பார்க்காமல் நம் தேசத்தை காக்க அயராது உழைக்கின்றனர். எல்லைகளில் நாட்டு மக்களை காப்பாற்ற கடினமாக போராடுகிறார்கள். சில சமயம் அவர்களின் உயிரையும் தியாகம் செய்து போராடி வருகின்றனர். அவர்களது குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் என அனைவரையும் தவிக்க விட்டுவிட்டு நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பகுதியில் அசோகன் என்பவர் ‘விஜயலக்‌ஷ்மி ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் 3 பேக்கரி கடைகளை நடத்தி வருகிறார். இந்த மூன்று பேக்கரியிலும் ராணுவ வீரர்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளுக்கும் பணம் பெறாமல் இலவசமாக வழங்கப்படும்.

‘நமது தாய் நாட்டுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்புக்கு எனது சிறிய அன்பளிப்பு’ என பேனர் வைத்து மன மகிழ்ச்சியுடன் இந்த சேவையை செய்து வருகிறார் அசோகன். மேலும் அவரது இந்தச் செயலுக்கு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply