Home » உதவி மேலாளருக்கு கொரோனா உறுதி..! மூடப்பட்ட ஆக்ஸிஸ் வங்கி கிளை.!
தமிழ்நாடு

உதவி மேலாளருக்கு கொரோனா உறுதி..! மூடப்பட்ட ஆக்ஸிஸ் வங்கி கிளை.!

bank-dailystand

தமிழகத்தில் கொரோனா தாக்கம் என்ரும் இல்லாத புது உச்சத்தை நாளுக்கு நாள் எட்டி வருகிறது. கொரோனாவை கட்டுபடுத்த மாவட்ட அளவில் கட்டுபாடுகள் தீவிரப்படுத்தபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டையில் கீழராஜ தெருவில் இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கி உதவி மேலாளருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது . அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.

அதனையடுத்து அவர் ராணியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு முகாமில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். தற்போது வங்கிக் கிளை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது . அவரின் வீடு இருக்கும் பகுதி கட்டுபாட்டு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

Leave a Reply