Home » தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதி..! இதுவரை இல்லாத அளவில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்..!
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதி..! இதுவரை இல்லாத அளவில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்..!

corona-dailystand

உஹான் நகரில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவினால் பாதிப்படைத்தோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 1,157 பேருக்கு ,கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,51,820 ல் இருந்து 1,56,369 ஆக உயர்வு. புதிதாக 69 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,236 ஆக உயர்வு.

இன்று மட்டும், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,106. இதுவரை, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்வு.

Related posts

Leave a Reply