Home » விதிமுறைகளை மீறியதால் 2-வது டெஸ்டிலிருந்து ஆர்ச்சர் அதிரடி நீக்கம்…!!
விளையாட்டு

விதிமுறைகளை மீறியதால் 2-வது டெஸ்டிலிருந்து ஆர்ச்சர் அதிரடி நீக்கம்…!!

archer-dailystand

இங்கிலாந்து – மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. 2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜோ டென்லி நீக்கப்பட்டுள்ளார். அணியில் மீண்டும் கேப்டனாக ஜோ ரூட் இடம்பிடித்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

அனைத்து வீரரின் அடையாள அட்டையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் எந்த ஒரு வீரராவது பாதுகாப்பு விதிமுறையை மீறினால் கண்டுபிடித்துவிட முடியும். இந்நிலையில் செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்கு ஒவ்வொரு வீரரும் தனியாகச் அவரவர் காரில் சென்றுள்ளார்கள். ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டும் செல்லும் வழியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதால் விதிமுறையை மீறியதாக 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து 5 நாள்கள் அவரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த 5 நாள்களுக்குள் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனக் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பரிசோதனைகளின் முடிவுகளில் அவருக்கு தொற்று இல்லை என வந்தால் மட்டுமே அவர் அணியில் இணைய அனுமதிக்கப்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply