Home » ஜில்லுனு சுவையான மஞ்சள் பூசனி கீர்….!! ஈசி ரெசிப்பி…!!
லைஃப்ஸ்டைல்

ஜில்லுனு சுவையான மஞ்சள் பூசனி கீர்….!! ஈசி ரெசிப்பி…!!

pumkin-keer-dailystand

மஞ்சள் பூசணியில் வைட்டமின்களான பி1, பி2, பி6, சி, டி, ஈ மற்றும் பீட்டாக கரோட்டீன் போன்றவைகளுடன், கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுக்ரோஸ் போன்றவைகளும்  ஏராளமான அளவில் உள்ளது. அதோடு இதில் கார்போஹைட்ரேட்டுகளும், குறிப்பிட்ட புரோட்டீன்களும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் இருக்கும் இந்த மஞ்சள் பூசனியை வைத்து ஜில்லுனு சுவையான கீர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

pumpkin-dailystand

தேவையான பொருட்கள் :

மஞ்சள் பூசனி – 1/4 கிலோ

தேங்காய் – 1/2 மூடி

வெல்லம் – 1/4 கிலோ

ஏலக்காய் – 4

முந்திரி – 10

செய்முறை :

முதலில் 1/4 கிலோ மஞ்சள் பூசனியை தோல் எடுத்து நன்றாக
வேகவைத்து மசித்துக் கொள்ளவும். 1/2 மூடி தேங்காவை அறைத்து
பால் எடுத்து வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு  அதில் 10 முந்திரி போட்டி வதக்கி தனியே எடுத்து வைத்துவிட்டு அந்த வாணலியிலேயே பூசனியின் விழுதை சேர்த்து கலந்து அதில் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை கலக்கவும்.

கொதித்தவுடன் தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் 4 ஏலக்காயை தட்டி போட்டு வருத்து வைத்த முந்திரியை சேர்த்து இறக்கவும். பூசனிகாய் கீர் தயார். இதை ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லுனு குடிக்கலாம். இது மிகவும் ருசியான ஆரோக்கியமான ஈவனிங் ட்ரிங்க்.

Leave a Reply