Home » இரண்டே பொருட்கள் இருந்தால் போதும் ‘ராகி இடியாப்பம்’ தயார்…!! அது எப்படி…??
லைஃப்ஸ்டைல்

இரண்டே பொருட்கள் இருந்தால் போதும் ‘ராகி இடியாப்பம்’ தயார்…!! அது எப்படி…??

food-dailystand

ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது. தினமும் ராகியில் செய்யப்பட்டதை காலை உணவாக எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்தை நமது உடலில் ஏற்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

food-dailystand

இதில் இரும்புச்சத்து, லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் பல சத்துக்கள் உள்ளன. இத்தனை சத்துக்களை கொண்ட ராகியை வைத்து சுவையான ராகி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள் :

ராகி மாவு                           – 2 கப்
நல்லெண்ணெய்     – 2 டீஸ்பூன்
தண்ணீர்                            – தேவையான அளவு

food-dailystand

செய்முறை :

இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டாம். வெந்த மாவை ஆற வைக்கவும். பிறகு தண்ணீரை கொதுக்க வைத்து அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வெந்த ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்தில் கிளறவும். சூடாக இருக்கும் போதே இடியாப்பங்கலாக பிழியவும்.

food-dailystand

ஒன்றின் மேல் ஒன்று பிழியாமல் பரவலாக பிழிந்தால் கொழகொழப்பு இருக்காது. வெல்லம் சேர்த்த தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மேலும் ராகியில் செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் உள்ளிட்ட அனைத்து
நோய்களும் குணமாகும்.

Leave a Reply