September 28, 2020
Home » உங்களுடைய உதடு நிறத்தை வைத்தே, ஆரோக்கியத்தை கண்டறியலாம் வாங்க
லைஃப்ஸ்டைல்

உங்களுடைய உதடு நிறத்தை வைத்தே, ஆரோக்கியத்தை கண்டறியலாம் வாங்க

lips colour-dailystand

உங்களுடைய உதட்டின் நிறத்தை வைத்தே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா, இல்லையா என்று கண்டுபிடிக்கலாம். இது கேட்பதற்கு புதிதாக இருந்தாலும், உண்மைதான். உங்களுடைய உதட்டின் நிறம் என்ன என பார்த்து நீங்க ஆரோக்கியமா இருக்கிறீர்களா என பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே!

சிவப்பு நிற உதடு :

உதடு அதிகமாக பிரகாசமாகவும், நன்கு சிவப்பாகவும் இருந்தால் அவர்களது உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருக்கிறது என அர்த்தம்.
கல்லீரம் மற்றும் மண்ணீரல் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் உதடு பளிச்சென்று சிவப்பாக இருக்கும்.
இந்த வகையான பிரச்சனையை தீர்க்க செவ்வந்தி பூ கலந்த தேனீர், மற்றும் கசப்பு நிறைந்த முலாம் பழம் போன்றவற்றை நீங்கள் எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
ஊதா நிற உதடு :

ஒருவருக்கு உதடானது ஊதா நிறத்தில் இருந்தாலோ, உதட்டில் அதிகம் கோடுகள் இருந்தாலோ அவர்களுடைய உடல் சமநிலையில் இல்லை என்று அர்த்தம்.
இந்த வகையான பிரச்சனையை தீர்க்க இந்த வகை உதடு நிறமுடையவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். கேரட், மீன்கள் மற்றும் உருளைகிழங்கு கலந்த உணவுகளை அதிகமாக சேர்ப்பது நல்லது.
கருப்பு நிற உதடு :

ஒருவருக்கு உதடு கருப்பாக இருக்குமானால் அவர்களுடைய உடலின் செரிமான அமைப்பில் எதோ பிரச்சனை உள்ளதை குறிக்கின்றது.
சூடான தண்ணீரை அடிக்கடி குடிப்பதால் இந்த வகை பிரச்சனையிலிருந்து விடுபடலாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை தரும் விஷயமாகும்.
சாம்பல் நிற உதடு :

சிலருடைய உதடு மங்கலான இளம் சிவப்பு, வெண்மை நிறம் மற்றும் சாம்பல் போன்ற நிறங்களில் இருக்கும். இதற்கு அதிக குளிர்ச்சி மற்றும் ரத்த சோகை பிரச்சனைகள் உள்ளதாக அர்த்தம். இந்த வகை நோய்கள் குணமடைய இவர்கள் சூடான உணவை உண்ண வேண்டும். அதுமட்டுமில்லாமல் வைட்டமின் -சி மற்றும் இரும்புச்சத்து உள்ள பேரிச்சம்பழம், சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுடைய உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் நீங்கள் கவலையே பட வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமாகவும், நலமாகவும் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

Leave a Reply