Home » வாய்விட்டு சிரிப்பதால் நம் உடலில் நிகழும் ஆரோக்கியமான மாற்றங்கள் இவ்வளவா.?கொஞ்சம் சிரிங்க பாஸ்.!
லைஃப்ஸ்டைல்

வாய்விட்டு சிரிப்பதால் நம் உடலில் நிகழும் ஆரோக்கியமான மாற்றங்கள் இவ்வளவா.?கொஞ்சம் சிரிங்க பாஸ்.!

baby_dailystand.in

“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அது உண்மைதான், நாம் வாய்விட்டு சிரிப்பதானால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதை பற்றி கொஞ்சம் தெரிஞ்சக்கலாம் வாங்க..

மனிதன் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துவான், அதில் சிறப்பான ஒரு உணர்வு நம் சிறப்பு ஆகும். நாம் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு இருந்தால், நாம் மட்டுமில்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வாக வைத்துக் கொள்ளலாம்.

சிரிப்பு நம் உடலில் என்ன விதமான மாற்றங்களை நிகழ்த்துகிறது.?

நாம் உயிர்வாழ ஆக்சிஜன் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் அதிகளவில் சிரிப்பதனால் நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளே செல்கிறது. இதனால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது.

மனம்விட்டு, வாய் விட்டும் சிரிப்பதனால் முகத்தில் இருக்கும் தசைநார்கள் விரிவடையும், இதனால் சிரிப்பவர்கள் முகம் அழகாகவும்,பளிச்சென்றும் இருக்கும்.

இதயத்துடிப்பை நாம் சாதாரண நிலையில் வைத்துக்கொள்ள, சிரிப்பு நமக்கு முக்கிய பங்காற்றுகிறது. முக்கியமாக நாம் மனதாற வாய்விட்டு சிரித்தால் உடல்வலி காணாமல் போய்விடும்.

நாம் வாய்விட்டு சிரிப்பதினால், ஸ்டிரெஸ் ஹார்மோன்களின் அளவு குறைந்து, இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் நம்மை எளிதில் அண்டாது

ஒருவர் சிரிக்கும் போது மூளையில் அதிகளவில் எண்டோர்ஃபின் ஹார்மோன், சுரப்பதால் நம் உடல் சுறுசுறுப்படையச் செய்கின்றது.

ஒருவருடைய நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைத்துவிடும். உடலில் ஜீரணமாகும் நீர் சுரக்க செய்யும், இதனால் உணவும் எளிதில் ஜீரணமடையும்.

இதை அனைத்தையும் விட நீங்கள் அதிகம் சிரித்தால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் தெரிவீர்கள்.
அதனால் இனிமேல் நிறைய சிரிங்க, சந்தோஷமா இருங்க பாஸ்.

Leave a Reply