September 28, 2020
Home » பாட்டி காலத்து ராகி உருண்டையில் உள்ள நன்மைகள் இவ்வளவா ? ஆச்சரியமா இருக்கே
லைஃப்ஸ்டைல்

பாட்டி காலத்து ராகி உருண்டையில் உள்ள நன்மைகள் இவ்வளவா ? ஆச்சரியமா இருக்கே

raagi urundai-dailystand

இது கேழ்வரகு மாவை நன்கு பிசைந்து கெட்டியாக உருண்டை போல் செய்வார்கள். இதை தான் ராகி உருண்டை என சொல்வார்கள்.

ஆனால் நம்ம ஊரில் கேழ்வரகை கூழாக்கி, அதை கெட்டியாக செய்தால் ராகி உருண்டை என சொல்வார்கள். இதன் பாரம்பரிய இடம் கர்நாடகா ஆகும்.

  • இதில் அதிகமாக கொழுப்பு சத்து இருக்காது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ராகி உருண்டையை உண்ணலாம்.
  • கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால்,எலும்புகளுக்கு வலிமை தரச் செய்கின்றது.
  • இதனால் முதியவர்களுக்கு இந்த உணவு நன்மை பயக்கும். முதியவர்களுக்கு இதை அதிகமாக உண்ணலாம்.
  • நார்சத்து இதில் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வல்லது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் ராகி உருண்டையை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
  • ராகி உருண்டை எளிதில் செரிமானமடையக் கூடிய உணவாகும். ஜீரணம் ஆக பிரச்சனை உள்ளவர்கள் இதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
  • அதுமட்டுமில்லாமல் கல்லீரலில் உள்ள அதிகமான கொழுப்புகளை ராகி உருண்டை கரைக்க வல்லது. இதனால் கல்லீரல் அழற்சி எனப்படும் ஃபேட்டி லிவர் என்கின்ற கல்லீரல் தொடர்பான பிரச்சனை நீங்கிவிடும்.
  • ஹைபோ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ராகி உருண்டையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அது இப்பிரச்சனையை எளிதில் குணப்படுத்த கூடியது.
  • உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக் கூடிய ஆண்டி ஆக்சிடண்ட் பண்புகள் ராகி உருண்டையில் அதிகமாக உள்ளதால் இதை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியது.


இதை தயாரிப்பது மிகவும் எளிதான விஷயமாகும். உங்களுக்கு அவசரமான நேரங்களில் இதை சிலநிம்டங்களிலே நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.

Leave a Reply