Home » எந்த விதமான மலர்களை உணவில் சமைக்க பயன்படுத்தலாம்..! ஒரு சுவாரசிய பதிவு..!
லைஃப்ஸ்டைல்

எந்த விதமான மலர்களை உணவில் சமைக்க பயன்படுத்தலாம்..! ஒரு சுவாரசிய பதிவு..!

flowers-dailystand

மலர்களை உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும்பயன்படுத்துகிறோம். என்னவிதமான மலர்களை எப்படி உணவில் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கு காண்போம்.

சாமந்தி:

லேசான கசப்பு சுவையுடைய சாமந்தியில் தேநீர் செய்யலாம்.அழற்சி குடல் நோய்கள், இரைப்பை அழற்சி, அமில ரிஃப்ளக்ஸ், புண்கள் மற்றும் மாதவிடாய் பிடிப்பு போன்ற பல உடல் உபாதைகளை குணப்படுத்த இந்த சாமந்தி தேநீர் உதவுகிறது.

வாழைப்பூ:

இந்திய உணவு வகைகளில் வாழைப்பூ பல்வேறு வகையான உணவுகளை சமைக்க பயன்படுகிறது. வாழைப்பூவில் இரும்பு சத்து,வைட்டமின்கள், நார்ச்சத்துஉள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. இந்தப்பூவை சமைத்து உண்பதால் நோய் தொற்றுகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். மேலும் நீரிழிவு நோயை ககட்டுப்படுத்த இந்த வாழைப்பூ உதவுகின்றது. மாதம் ஒருமுறையாவது இந்த வாழைப்பூவை உணவாக சமைத்து உண்டு வரலாம்.

முருங்கை மலர்கள்”

முருங்கை பூக்கள் எளிமையாக கிடைப்பதால், இங்கு பெரும்பாலான வீடுகளில் இந்த பூக்களை உணவாக சமைப்பார்கள். இந்த பூக்களில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.சளி, இருமல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இந்த பூக்களை சமைத்து உண்டு வரலாம்

ரோஜா:

இந்தியாவில் அதிகமாக அழகிற்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் முக்கியமான மணம் கமழும் மலர் ரோஜா. இந்த ரோஜாவினால் தயாரிக்கும் ரோஸ் வாட்டர் பல சுவையான இனிப்பு பண்டங்களில் சேர்க்கப்படுகிறது. குலாப்ஜாமூன், ஜாம், மர்மலேட்ஸ், ஷார்பட் போன்ற இனிப்பு வகைகளில் சுவைக்காகவும், மணமாக இருக்கவும் ரோஸ் வாட்டரை பயன்படுத்துகிறார்கள்.

Leave a Reply