September 28, 2020
Home » ஆண்களுக்காக – முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய ஈஸி டிப்ஸ்
லைஃப்ஸ்டைல்

ஆண்களுக்காக – முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய ஈஸி டிப்ஸ்

vijay_devarakonda_dailystand.in

பெண்கள் மேக்கப் செய்வதை ஆண்கள் கிண்டல் செய்தாலும், ஆண்களும் தங்களுக்கான மேக்கப் பொருட்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதுவும் தற்போதைய காலத்தில் நிறைய அழகு சாதன பொருட்கள் ஆண்களுக்கும் வந்துவிட்டது. ஆண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளன. அவற்றை பற்றி இதில் காண்போம்.

பேஷ் வாஷ்:

ஆண்களின் ஒவ்வொரு முகத்திற்கும் தகுந்தாற்போல் பேஷ் வாஷ்கள் கடைகளில் விற்கப்படுகிறது. அதில் உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆயில் ஸ்கின் இருந்தால் உங்களுக்கான தனி பேஷ் வாஷை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். சாலிசிலிக் ஆசிட் இருக்கும் பேஷ் வாஷை நீங்கள் உபயோகம் செய்யலாம். காரணம் இது உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பளபளப்புடன் இருக்க செய்யும்.

முகத்தை கழுவ வேண்டும்:

முகம் சோர்வாக இருப்பதற்கு ஆயில் ஸ்கின் மட்டும்காரணம் அல்ல. உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், திட்டுகள் மற்றும் இறந்த சரும செல்கள். எனவே நீங்கள் அடிக்கடி முகத்தை கழுவினால் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். படிந்த அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் சென்று விடும்.

பேஷியல்:

பேஷியல் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. ஆண்களும் பேஷியல் செய்யலாம். நீங்கள் பேஷியலுக்கு என விற்கும் தனி கீரிம்களை வாங்கி உபயோகிக்கலாம். இது உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி விடும். வருடத்திற்கு இருமுறையாவது பேஷியல் செய்வது முகத்திற்கு நன்மை தரும் . உங்கள் சில நாட்கள் வரை, முகம் பிரஷ்-ஆக இருக்கும்.

காமிடோஜெனிக் :

காமிடோஜெனிக் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. காரணம் இவை கரும்புள்ளிகளை உருவாக்குகின்றன. அதனால் உங்களுக்கு தேவையான அழகுசாதனப்பொருட்கள் வாங்கும்போது காமிடோஜெனிக் இல்லாத பொருளாக பார்த்து வாங்க வேண்டும்.

ஈரப்பதம்:

உங்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொளவது நன்மை பயக்கும். காரணம் ஈரப்பதம் இருந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் வர வாய்ப்பு குறைவு. எனவே உங்கள் முகத்திற்கு தகுந்த கீரிம்களை நீங்கள் உபயோகிக்கலாம்.

இந்த 5 வழிமுறைகளை மட்டும் பாலோ செய்தால் போதும் நண்பர்களே நீங்களும் அழகுடன், ஜொலிப்பாக மிண்ணுவீர்கள்

Leave a Reply