September 22, 2020
Home » “ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்”-சோனியா காந்தி..!
இந்தியா

“ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்”-சோனியா காந்தி..!

soniyaghandi_dailystand.in

கொரோனா தாக்கம் காரணமாக நாட்டின் அனைத்து தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அனுமதி அளித்தது.

ஆனால் அப்படி பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் அவர்களின் பயண கட்டணத்தை அவர்களே எடுத்துகொள்ள வேண்டும் என அறிவித்தது. பல நாட்களாக வேலையில்லாமல் இருக்கும் அவர்களிடத்தில் பயண கட்டணம் கேட்பதற்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,நமது நாட்டின் நலனுக்காக போராடும் தொழிலாளர்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது என்றும், புலம் பெயரும் தொழிலாளர்களின் பயண கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

Related posts

Leave a Reply