September 28, 2020
Home » நாங்க ஒன்னும் தங்கத்துக்கு குறைச்சல் இல்ல.. என போட்டிபோட்டு அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை.!!
இந்தியா

நாங்க ஒன்னும் தங்கத்துக்கு குறைச்சல் இல்ல.. என போட்டிபோட்டு அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை.!!

petroldisel_dailystand.in

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனால், பெட்ரோல் டீசல் விலை தங்கத்தின் விலை அளவிற்கு ஏறி இறங்கி வருகிறது. அதனடிப்படையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.73, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86 ஆகவும் நிர்ணயமாகியுள்ளது.

இந்த விலை ஏற்றம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Reply