September 25, 2020
Home » கொரோனா மருத்துவமனையில் சூப்பரான புதிய வசதி….!! டெல்லி அரசின் டக்கரான ஏற்பாடு…!!
இந்தியா

கொரோனா மருத்துவமனையில் சூப்பரான புதிய வசதி….!! டெல்லி அரசின் டக்கரான ஏற்பாடு…!!

delhi-dailystand

நாடு முழுவதும் கொரோனா காட்டு தீயை போல் பரவி வருகிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 2 -ம் இடத்தில் உள்ளது.
இதுவரை டெல்லியில் 70,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 2,365 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக நோயாளிகள் தனிமைப்படுத்துவதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்த மனஉளைச்சலை குறைக்கும் வகையில் டெல்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள காணொலி மூலம் உரையாடும் வசதியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

delhi-dailystand

அப்போது, 3 மாதங்களுக்கு முன்பே இந்த மருத்துவமனை முழுமையாக கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டது என்றும் அங்கு 2,000 படுக்கைகள் கொண்டதாகவும் ஏராளமான கொரோனா நோயாளிகள் இங்கு குணமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்யப்படும் பிளாஸ்மா தெரபி சிகிச்சை, முதன்முதலில் இந்த மருத்துவமனையில்தான் செய்யப்பட்டது என்றும் இதுவரை இந்த கொரோனா காலத்தில் மட்டும் 114 பிரசவம் நடைபெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Reply