September 28, 2020
Home » திட்டமிட்டபடி நீட் தேர்வு நடக்கும் – இந்திய மருத்துவ கவுன்சில்
இந்தியா

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடக்கும் – இந்திய மருத்துவ கவுன்சில்

mci-dailystand

நீட், ஜே.இ.இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய மருத்துவ கவுன்சில்
அறிவித்துள்ளது.

இதுகுறித்த வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் ஒன்று முதல் 6-ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு 15,97,000 பேரும், ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 பேரும் பதிவு செய்துள்ளள்ளனர்

மேலும் நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வழங்கப்படும். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேர்வுகளை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Leave a Reply