Home » 7 முறை பிளாஸ்மா தானமளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறிய வள்ளல்…!!
இந்தியா

7 முறை பிளாஸ்மா தானமளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறிய வள்ளல்…!!

plasma-dailystand

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு உள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மா தானம் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லி ஜஹாங்கிர்புர் பகுதியைச் சேர்ந்த கான் கடந்த புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது முறையாக பிளாஸ்மா தானமளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார். இதனால் அவர் முதல் பிளாஸ்மா கொடையாளியாக அறியப்பட்டவர். கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த தனது சகோதரி மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு. பிறகு ஏப்ரல் 5-ம் தேதி குணமடைந்து
வீடு திரும்பினார்.

பலருக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பிளாஸ்மா தானம் அளித்து வருகிறேன் என கான் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த தனது
சகோதரி மூலம் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான கான், ஏப்ரல் 5 ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.

மேலும், என்னுடன் பழகி வந்த பலரும் எனக்கு கொரோனா வந்தவுடன், என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆனால் தற்போது வரை எனது உடல் நோய்யை எதிர்க்கும் ஆற்றலை உற்பத்தி செய்த வருவதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். அது பிறருக்கு
உதவுவதற்காகவே என்றும் கருதுகிறேன் என கூறுகிறார் கான்.

Related posts

Leave a Reply