Home » மராட்டியத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்…!!
இந்தியா

மராட்டியத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்…!!

cm-dailystand

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கர் 1985ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை மராட்டியத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். இவருக்கு வயது 88. இவர் தனது மகளின் மருத்துவ தேர்வு மதிப்பெண்களில் திருத்தம் செய்த முறைகேட்டு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்ததனை அடுத்து அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புனேவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

Leave a Reply