September 25, 2020
Home » தலைநகருக்கு அருகே தலைதூக்கும் வெட்டுக்கிளி தாக்குதல்.. டெல்லி அரசு அவசர ஆலோசனைக்கு ஏற்பாடு
இந்தியா

தலைநகருக்கு அருகே தலைதூக்கும் வெட்டுக்கிளி தாக்குதல்.. டெல்லி அரசு அவசர ஆலோசனைக்கு ஏற்பாடு

locust_attack_dailystandin

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு நடுவே, வெட்டுக்கிளி தாக்குதல், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இன்னோரு சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

தலைநகர் டெல்லி உட்பட குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான டெல்ப் I-IV, சக்கர்பூர், சிக்கந்தர்பூர், சுக்ராளி ஆகிய பகுதிகளில், ஏராளமான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளிகளை சமாளிக்க குருகிராம் மக்கள் பாத்திரங்களால் சத்தம் எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டி வருகின்றனர். குருகிராமில் வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அப்பகுதி மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் பயிர்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து ஆலோசிப்பதற்கு டெல்லி அரசு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்பிரச்சினையை சமாளிப்பதற்கு தேவையான வழிமுறைகளை கூடிய விரைவில் டெல்லி அரசு வெளியிடும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Reply