September 25, 2020
Home » டெல்லி சரவண பவன் உணவகத்தில் சாம்பாரில் பல்லி..! உணவகம் மீது வழக்கு பதிவு ..!
இந்தியா

டெல்லி சரவண பவன் உணவகத்தில் சாம்பாரில் பல்லி..! உணவகம் மீது வழக்கு பதிவு ..!

delhi-dailystand

டெல்லியில் உள்ள சரவண பவன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாம்பாரில் பல்லி இருந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெல்லியில் உள்ள கொணாட் பிளேஸ் என்ற பகுதியில் சரவணபவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு யஷ் அக்னிகோத்ரி என்பவர்  குடும்பத்துடன் உணவருந்த வந்துள்ளார். அப்போது அவருக்கு பரிமாறபட்ட உணவில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக டெல்லி சரவண பவன் உரிமையாளர் மற்றும் அதன் மேலாளர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

Leave a Reply