September 28, 2020
Home » இ-பாஸ் முறைகளையும், அதைத் தொடர்ந்த கட்டுப்பாடுகளையும் ரத்து செய்த மாநிலம்..!
இந்தியா

இ-பாஸ் முறைகளையும், அதைத் தொடர்ந்த கட்டுப்பாடுகளையும் ரத்து செய்த மாநிலம்..!

karnataka-border-dailystand.in

கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சொந்த வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இ-பாஸ் முறையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி சேவா சிந்து செயலியில் இ-பாஸ் பெறுவது, விமானம் மற்றும் சாலை வழியாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது, கையில் முத்திரை குத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என அனைத்து விதிமுறைகளும் ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும், 14 நாட்கள் தம்மை தாமே தனிமைபடுத்திக் கொள்ளப்படுத்த மட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Reply